FAMILY TREE
Genealogy of My Family
பட்டையதார் குடும்ப மரம்
'ஒருவரின் கடந்த காலத்தை அறிவது' ஒரு சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பான அனுபவம். எனது குடும்பத்தின் வம்சாவளியைக் கண்டறியும் ஆர்வம் எனக்குள் இருந்தது.
கடவுளின் கருணையினாலும், எனது பெரியப்பா Fr. ஸ்டீபன் கஸ்பார் அவர்களின் வழிகாட்டுதலினாலும், நாங்கள் எங்கள் குடும்பத்தின் ஆறாவது தலைமுறையினர் வரை கண்டுபிடிக்க முடிந்தது. அவரது சிறப்புமிக்க நினைவாற்றல் மற்றும் கடுமையான தரவு சேகரிப்பு ஆகியவற்றின் உதவியுடனும், எனது தொழில்நுட்ப உதவியுடனும், ஒரு குடும்ப மர வரைபடம் உருவாக்கப்பட்டு இங்கு வழங்கப்பட்டுள்ளது. இது:
"பட்டையதார் பரம்பரை பதிவரைவு"
மார்ச், 2020 முதல் கொரானா தனிமைப்படுத்தப்பட்ட நாட்களின் போது, தந்தையவர்களின் மூன்று மாத கடின உழைப்பு மற்றும் அரிய முயற்சியால் இத்தகவல்கள் தொகுக்கப்பட்டு, வரைபடமாக்கப்பட்டுள்ளன. தன் குருத்துவ வாழ்வின் 40 ஆண்டுகள் நிறைவுற்ற, மாணிக்க விழா (Ruby Jubilee) நினைவாக, 29-06-2020 அன்று, இவ்வரைபடம் பொது இணையவெளியில் தந்தை ஸ்டீபன் கஸ்பார் அவர்களால் வெளியிடப்பட்டது. தன் குருத்துவப் பணியில், இறைத்திருவுளம் அறிந்து, மேன்மேலும் பல சாதனைகள் புரிந்திட இறைவனை மன்றாடுகிறோம். பொன்விழாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் !
'Knowing one's past' is a fascinating and thrilling experience. I had the zeal to trace out the genealogy of my family. By the benevolence of God and with the great help from Rev. Fr. Stephen Gaspar, my uncle, we were able to trace far back to the sixth generation. With the help of his remarkably retentive memory and strenuous data collecting, along with my technical assistance, a family tree map has been created and presented here.
'THE FAMILY TREE OF PATTAIYATHAR'
During the time of Corona isolation (Marsh, 2020 Onward), by the strenuous effort and hard work of Rev. Fr. Stephen Gaspar, these information were gathered and designed as the Family Tree. On the Day of Ruby Jubilee of his priesthood (40 Years - 29-06-2020), this Family Tree was proudly launched and made available to the public via internet forum. May God continue to shower his choicest blessings upon him to continue his mission successfully and fruitfully. Awaiting his Golden Jubilee Celebration!
Fr. Stephen Gaspar
"எல்லாம் நன்மைக்கே"
Fr. ஸ்டீபன் கஸ்பார்,
குமரன் திருநகர் பங்குத் தந்தை,
திண்டுக்கல் மறைமாவட்டம்.