இசையாக்கத் தொகுப்பு

என் ஆன்மா

என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகிறதே

என் மீட்பராம் கடவுளில் பேருவகை அடைகிறதே


அடிமை எந்தன் தாழ்நிலையை நோக்குகின்றார்

தலைமுறையல்வாம் எனைப் புகழ்ந்திடுமே

வல்லரும் கடவுள் அரும் செயல் புரிந்தார்

தூயவர் என்பதே அவர் பெயராம்


அவரில் அஞ்சி நடப்போர்க்கு இரங்கிடுவார்

அவர்தம் தோள் வலிமையை காட்டிடுவார்

செருக்குற்ற மனிதரைச் சிதறடித்தார்

தாழ்நிலையில் இருப்போரை உயர்த்திடுவார்.


பசித்தோரை நலன்களினால் நிரப்பிடுவார்

செல்வரை வெறுங்கையைராய் அனுப்பிடுவார்

வழிமரபினரைத் தன் நினைவில் கொள்வார்

தம்மக்கள் அனைவரின் துணை ஆவார்.


இயல் : சகோ. ஜோசப் க.ச.

விவிலியம் : லூக் 1: 46-55.

இசை : சகோ. ஜோசப் க.ச.

குரல் : சகோ. ஜூலியஸ் க.ச.

ராகம் : கல்யாணி

தாளம் : திஸ்ரம்

காலம் : 27-28-12-2012

இடம் : அசிசி ஆசிரமம் - அறை

பலி பொருள் வழியாய்

பலிப் பொருள் வழியாய்

எமை முழுவதுமாய்

உந்தன் கரங்களில் தருகின்றோம்.

உமது அருட் பெருக்கின் கொடையாய்

அப்பமும், இரசமும் பெறுகின்றோம்

இதனை ஏற்றிவடுவாய்

பலியாய் மாற்றிடுவாய்

இறைவன் என்றென்றும்

வாழ்த்தப் பெறுகவே

நிதமும் வாழ்த்துவோம்


பூமித் தாயின் விளைவாம்

மனித உழைப்பின் பயனதுவாய்

அப்பத்தை உமக்களிக்கின்றோம்

உயிர்தரும் உணவாய் மாற்றும்


திராட்சைக் கொடியின் விளைவாம்

மனித உழைப்பின் பயனதுவாய்

இரசத்தை உமக்களிக்கின்றோம்

ஆத்தும பானமாக்கும்


இயல் : சகோ. ஜோசப் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

குரல் : சகோ. ஜோசப் க.ச.

ராகம் : புஷ்பலதிகா

தாளம் : ஆதி

காலம் :

இடம் :

நின்னை தரிசிக்க ஆவல்

நின்னை தரிசிக்க ஆவல் கொண்டேன் - நிதம்

நிலவிலும் தேடி கலைப்படைந்தேன்

இறை உன்னைக் கண் தொண்டேன்

இதயத்திலே எந்தன் இதயத்திலே பாட


அகன்ற வானத்திலே தேடிச் சென்றேன் -

ஆழியின் அடியினிலே உன்னை நோக்க முயன்றேன்.

அழிக்கும் தணலாக உனை நினைத்தேன் - 2

எந்தன் இதயத்தைத் தான் மறந்தேன் - 2


சுழலும் காற்றினிலே சீற்றம் கண்டேன்

வீசும் தென்றலே வெறுமையைக் கண்டேன்

படைப்புக்கள் அனைத்தையும் ஆய்வு செய்தேன் - மணம்

தேவனின் உறைவிடம் என மறந்தேன்


இயல் : சகோ. ஜோசப் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

குரல் : சகோ. ஜூலியஸ் க.ச.

ராகம் : கலவை

தாளம் : ஆதி

காலம் : July 2012

இடம் : The Chapel, Assisi Ashram

எல்லாம் வல்ல இறைவனிடமும்

எல்லாம் வல்ல இறைவனிடமும்

சகோதர சகோதரிகளே

உங்களிடமும் நான் பாவியென்று

ஏற்றுக் கொள்கின்றேன் - 3


ஏனெனில் எந்தன் சிந்தனையாலும்

சொல் செயலாலும்

கடமையில் தவறியதாலும்

பாவங்கள் பல செய்தேன் - 3


என் பாவமே - 2

என் பெரும் பாவமே

ஆகையால் என்றும்

கன்னியாம் தூய

மரியாளையும் வானதூதரையும்

புனிதர்கள் அனைவரையும்

இறைமக்கள் உங்களையும்

பாவி எனக்காக வேண்டிட இறைஞ்சுகிறேன் - 3


இயல் : சகோ. ஜோசப் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

குரல் : சகோ. ஜூலியஸ் க.ச.

ராகம் : சுபபந்துவராளி

தாளம் : ஆதி

காலம் :

இடம் : The Chapel, Assisi Ashram

தாகமாய் இருப்போரே

தாகமய் இருப்போரே - என்

நீர் நிலைக்கு வாருங்கள் - பெரும்

சுமைதனை சுமப்போரே - என்

ஆறுதலை தேடுங்கள்

என் நுகம் எளிது

என் சுமை இனிது

இளைப்பாறுதல் நான் தருவேன்


உணவாக இல்லாத ஒன்றிற்காக

எதற்காக செலவிடுகின்றீர் ?

நிறைவு கொடாத ஒன்றிற்காக

உழைப்பினை வீண் செய்கின்றீர்?

நல்லுணவை உண்ணுங்கள்

கொழுத்தவற்றை புசியுங்கள் .

இறை நான் உனக்கு உணவளிப்பேன்


கொடியவர் தம் கடும் வழிமுறையை

வெறுத்தென்னின் சேர்ந்திடட்டும்

தீயவர் தம் பகை எண்ணங்களை

மறந்தென்னில் இணைந்திடட்டும்

அவர்களுக்காய் இரங்குவேன்

தாராளமாய் மன்னிப்பேன்

ஏனெனில் இரக்கத்தின் கடவுள் நான்.


மலைகளும் குன்றுகளும் மகிழ்ந்து பாடும்

கைகொட்டி ஆர்ப்பரிக்கும்

முட்களில் நறுமணச் செடி வளரும்

பழமரம் முளைத்து வரும்

என் பெயரை முழங்கிடும்

என் சின்னமாய் அமைந்திடும்

நானே படைப்பனைத்தின் தேவன்.


இயல் : சகோ. ஜோசப் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

குரல் : சகோ. ஜோசப் க.ச.

ராகம் : (ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்)

தாளம் : ரூபகம்

காலம் :

இடம் : அசிசி ஆசிரமம்

மண்ணில் மடிந்த

மண்ணில் மடிந்த ஓர் விதை - இன்று

மரமாய் எழுகின்றதே!

வேருடன் சாய்ந்த ஓர் மரம் மீண்டும்

வளர்ந்திடத் துளிர்க்கின்றதே

இறைவன் இயேசு உயிர்த்தார்

இறப்பை வென்று எழுந்தார்.

உலகம் மகிழ்ந்திடும்

உறவில் இணைந்திடும்

உயிர்த்த இயேசுவின் அமைதியில்

அல்லேலூயா - 3


மனித இதயங்கள் இணைந்து மகிழ

மாசு களைந்து பேரின்பம் பருக

உயிர்த்த இயேசு தருகிறார் -2

உறவின் சமாதானம்


சாதிப் பிரிவினை பிடுங்கி எறிய 2.

செருக்கு, தன்னலம் புடமிட்டு ஒழிக்க

உயிர்த்த இயேசு தருகிறார்

உறவின் சமாதானம்


இயல் : சகோ. ஜோசப் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

குரல் : சகோ. ஜோசப் க.ச.

ராகம் :

தாளம் : ஆதி

காலம் :

சூழல் : பாஸ்கா திருவிழிப்பு, 31-03-2013.

இடம் : Old Chapel, Assisi Ashram

இறைவன் அன்பாய்

இறைவன் அன்பாய் இருக்கின்றார்

அவரில் அன்பு பிறக்கின்றது

நம் வாழ்விற்காய் தன் ஒரே மகனை

நம் பாவத்தின் கழுவாய் ஆக்கினார் -2


அன்பில்லாதோர் கடவுளை அறியவில்லை

அன்பின் நிலையில் அச்சம் உறைவதில்லை- 2

அன்புள்ள மனதில் தேவன் இணைந்திருப்பார்

அவரன்பு நம்மில் நிறைவு பெறும்


பரம்பொருளின் முகம் பார்த்தவன் பாரிலில்லை

ஆயினும் இறையை நம்பிட மறுத்ததில்லை

காணும் அயலானை அன்பு செய்யாது

காணாக் கடவுளை நேசிப்பதேன் -


இயல் : சகோ. ஜோசப் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

ராகம் : பாகேஸ்ரீ

தாளம் : ஆதி

காலம் : Jan 2012

இடம் : Pio Ashram, Coimbatore

சூழல் :

மலர்ந்திடும் மலர்களாய்

மலர்ந்திடும் மலர்களாய்

மகிழ்ந்து ஒருங்கிணைவோம்

இறைவன் ஆலயத்தில்

பலியில் கலந்திடவே!


இணைவோம்-2 இறையில்லம் இணைவோம்

தொடுவோம் - 2 நிதம் தொழுவோம்


காற்றில் தவழ்ந்திடும் மணியினோசை

இறைவன் அழைப்பதின் இனிய நாதம்

கரங்கள் விரித்து நமையழைக்கின்றார்

அவரின் வார்த்தை இதயம் அருந்திட

உறவில் ஆழ்ந்து பரமன் பதம் செல்வோம்.


பிரிவு பேதங்கள் முழுதும் களைய

இறையின் அடிசென்று அமைதி அடைவோம்

நீதி நிலைக்க நிதமும் உழைப்போம்

உரிமை வாழ்வை உணர்ந்து வாழ்ந்திட

உறவில் ஆழ்ந்து பரமன் பதம் செல்வோம்


இயல் : சகோ. ஜோசப் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

குரல் : சகோ. ஜோசப் க.ச.

ராகம் : சலநாட்டை

தாளம் : ஆதி

காலம் : Jan - Mar 2011

இடம் : Paduvai Ashram Chapel

மனங்கள் மகிழ்கின்றதே

மனங்கள் மகிழ்கின்றதே

மரியைப் புகழ்கையிலே

பூமியெங்கும் நீதியாளும்

அமைதி அரசியே

அமல அன்னையே

வாழ்த்திப் பாடுகின்றோம்-உம்மை


அம்மா அமைதி அரசியே வாழ்க வாழ்கவே

அம்மா அமல அன்னையே வாழ்க வாழ்கவே


பாவத்தை அழிக்க பகலவனானாய்,

பகைமை இருளில் மதியானாய்

நன்மையின் விதையாம் ...ஆ... விண்மீனாய் - 2

அன்பை பொழிவதில் வானானாய்


செபமாலையெனும் கேடயம்ஆனாய்

தேற்றம் தருகும் தாயானாய்

பாவிகள் மெக்காய்.... ஆ...... பரிந்துரைக்கின்றாய்

அலகை பிடிதனில் மீட்கின்றாய்.


இயல் : சகோ. ஜோசப் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

குரல் : சகோ. ஜூலியஸ் க.ச.

ராகம் : (C D E G A Bb C - அடியோர் யாம் தரும்)

தாளம் : ஆதி

காலம் : 15-30, Jan 2013

சூழல் : Province Chapter, 01-02-2013.

இடம் : அசிசி ஆசிரமம் Chapel.

புவியில் புதுமை

புவியில் புதுமை புரிபவரே

பதுவை புனித அந்தோணியே

புவியோர் எம்மைப் புரந்திடுவீர்

புதிய வாழ்வும் தந்திடுவீர்.


இயேசுவின் அரசை வளர்த்திடவே

எளியோர் சபையினில் சேர்ந்தவரே - 2

குழந்தை இயேசுவைக் கரங்களிலே-2 என்றும்

ஏந்திடும் பெருமை அடைந்தவரே - 2


நம்பியே வந்தோம் உம்மிடமே

வேண்டிடும் வரங்கள் தந்திடுமே

புதுமைகள் புரிவதில் பெரியவரே-2 - நீர்

எமக்காய் இறைவனை வேண்டிடுமே.


இயல் : சகோ. ராஜன் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

எங்கள் காவலியே

எங்கள் காவலியே லூர்தன்னையே

உந்தன் புகழ் பாட உள்ளம் ஏங்குதே

வாழ்த்துகிறோம் வாழ்த்தி வணங்குகிறோம்

போற்றுகிறோம் போற்றி புகழுகிறோம்

ஆடிப் பாடி கொண்டாடுவோம்


வாழியவே வாழியவே எங்கள் தாயே

மாந்தர் எந்தன் தாய் நீயே லூர்தன்னையே


கடவிளின் வார்த்தை உளம் ஏற்றாயே

நானிறை அடிமை என மொழிந்தாயே

சிலுவை அடியினிலே பலி ஈந்தாயே

உலகிற்காக உந்தன் சேய் தந்தாயே


கானான் திருமணத்தில் பரிந்துரைத்தாயே

எங்கள் துயரத்திலும் அதைச் செய்வாயே

பாம்பன்விளையினிலே வாழ்கின்றாயே

காக்கும் காவலியாய் உறைகின்றாயே- 2


இயல் : சகோ. ஜோசப் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

குரல் : சகோ. ஜோசப் க.ச.

ராகம் :

தாளம் : திஸ்ரம்

காலம் : 10 Feb 2013.

சூழல் : பாம்பன்விளை திருவிழா

இடம் : Old Chapel, அசிசி ஆசிரமம்

சிலுவைப்பாதை

எதற்காகவோ என் இறைவா ?

எனை மீட்கவோ என் இறைவா?


நிலமாளும் நீதியின் தேவனுன்னை

நீசமனிதர் தீர்ப்பிடுவதும் ஏன்?


பார்பாவம் அனைத்தும் கழுவிடவே

பளுவாகும் குருசினைச் சுமப்பதும் ஏன்?


சுமைதாள இயலா வறியவனாய்

சிரம் தாழ்ந்து சருகாக சாய்வதும் ஏன்?


உளம் பாய்ந்த வாளால் ரணமடைந்து

உருகும் உன் தாயினைக் காண்பதும் ஏன்? -


கரம் கொண்டு உலகினை தாங்கிடும் நீ

கதியின்றி சீமோனை ஏற்பதும் ஏன்?


பரிதாபம் உருவாக்கும் திருமுகத்தை

பரிசாகத் துணிதனில் பதிப்பதும் ஏன்?


நெடுந்தூரம் நடந்ததில் களைத்தவனாய்

நெறியின்றி மறுமுறை வீழ்வதும் ஏன்?


உமைக் கண்டு அழுகின்ற மகளிருக்கு

உறவாகி நன்மொழி சொல்வது ஏன் ?


முன்னேற உடற்சக்தி எதுவுமின்றி

மூன்றாம் முறையாக விழுவதும் ஏன்?


உடையுரிந்து நிர்வாணமாக்கப்பட்டு

உருக்குலைந்த உடலாய் தெரிவது ஏன்


கொடும்பாவ ஏளன சிலுவைதனில்

கடும் வேதனை ஏற்று தொங்குவதேன்?


உயிர் காக்கும் பரம்பொருள்; பரமனும் நீ

உயிர் நீத்து பிணமாய்த் தொங்குவதேன்?


கருத்தாங்கி நினையீன்ற தாய்மரியாள்

கரமேந்தி உன்னுடல் தாங்குவதேன்?


முடிவேதும் இல்லாத இறைமகன் நீர்

முடிவாகும் குகைதனில் உறைவதும் ஏன்?


இயல் : சகோ. ஜோசப் க.ச.

இசை : சகோ. ஜோசப் க.ச.

குரல் : சகோ. ஜோசப் க.ச.

ராகம் : சிவரஞ்சனி

தாளம் : ஆதி

காலம் : Feb 2012

சூழல் : பெரிய வெள்ளி, 29-03-2013.

இடம் : Classroom, Shanthi Ashram