விழிகளிலே
அன்பனே
அன்பனே இறைவனைப் போற்று
நண்பனே இறைவனைப் போற்று
அமைதியில் இறைவனைப் போற்று
நாளுமே இறைவனைப் போற்று
உடலும் உயிரும் இணைந்துள்ள வரையில்
உன் புகழ் பாட இயைந்திடுவேன் - 2
வளமையும் பெருமையும் - ஆ...ஆ...ஆ
நீ தந்த கொடையே
வாழ்வின் மேன்மையும் நீ தந்த கொடையே - 2
வாழ்வாய் வழியாய் எனை வழி நடத்தி
எந்தன் வாழ்வை மாற்றுகின்றீர் - 2
உந்தன் உயிரையும் - ஆ...ஆ...ஆ
எமக்காய் ஈந்தீர்
உண்மையின் இறைவா உமதருள் தாரும் - 2
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
ராகம் : கல்யாணி
தாளம் : ஆதி
குரல் : Mr. பாக்யா
காலம் : Sep - Nov 2008
இடம் : தோப்புத்தோட்டம் ஆசிரமம்
விழிகளிலே
விழிகளிலே இமையாக என்னைக்
காத்திடும் இறைமகனே - 2
காற்றும் மழையும் ஓயா அலையும்
கானமாய் உம்மைப் புகழ்ந்தேத்திடுமே - 2
கதிரவன் வெம்மையில் மேகமாய் காத்திட்டாய்-2
காரிருள் தன்மையில் தணலாய் காத்திட்டாய் - 2
பேழையில் இறங்கி பிரசன்னம் தந்திட்டாய் - 2
பிறக்கும் முன்பே பெயர் சொல்லி அழைத்தாய் 2
வழியாய் ஒளியாய் உயிராய் உண்மையாய்
மானிட மீட்பைக் கொடுத்தவர் நீரே - 2
மண்ணில் பிறந்த எம் மறைபொருள் நீரே - 2
அன்பின் ஒளியினை அளித்தவர் நீரே - 2
எமக்கமாய் துன்புற்ற இறைமகன் நீரே - 2
கருணையின் உருவாய் இருப்பவர் நீரே-2 -
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : ஜேம்ஸ் ஆசிரியர்
ராகம் : கலவை
தாளம் : ஆதி
காலம் : Jan - March 2010.
இடம் : The Choir Room, Malayadipatty Church
வருகிறார் நம் இறைவன்
வருகிறார் நம் உறவைத் தேடியே
இதய வாசல் திறந்து அவரின் -
உறவில் '' உறவில் வாழுவோம்
உடலும் உயிரும் உள்ளம் என்றும்
உன்னை நினைத்து மகிழ்ந்திடும்
அமைதி வாழ்வை நாளும் காக்க - 2
மனதில் அன மகிழிச்சி நிறைந்திடும் - எங்கள்
உந்தன் வார்த்தை ஏற்று வாழ்ந்தால்,
உலகின் அமைதி பிறந்திடும்
பிறந்த அமைதி மனதில் நிலைக்க
உந்தன் அருளைப் பொழிந்திடும் - என்றும்
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : Mr. மருது
ராகம் :
தாளம் : ஆதி
காலம் : Feb 2011
இடம் : THe Chapel, Tuticorin.
இசையினில் ஒரு புது ரகம்
இசையினில் ஒரு புது ரகம் இங்கு
உனக்கென நான் பாடி
மொழியினில் தேன் மொழியினை இன்று
உனக்கென நான் தேடி இனிமையின் உரம் கூடி
தமிழின் கவியில் இனிய குரலில் உனை வாழ்த்திடுவேன்
உனை நினையா ஓர் யுகம் ஒரு போதும்
ஓர் நொடிக்கீடில்லையே
எனில் நீ இணைகின்ற ஒரு நொடிப் பொழுதும்
பல யுகத்தை வெல்லுமே
உன் புகழைப் பாடிடவே
என் உயிர் நிலைக்கின்றதே
வாழ்வும் நீ, வழியும் நீ, உயிரும் நீயே,
உன்னோடு நான் வாழ்கிறேன் - 2
கொடியினைப் பிரிந்த கிளைதனைப் போல
உனைப் பிரிந்து வாடினேன்
திசையறியாமல் தவித்திடும் கலம் போல்
உனை மறந்து வாடினேன்
உன் அன்பில் வாழ்ந்திடவே
என் உயிர் நிலைக்கின்றதே
உயிரும் நீ, உயிர்ப்பும் நீ, உண்மையும் நீயே ..
உன்னோடு நான் வாழ்கிறேன் - 2
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : ஜேம்ஸ் ஆசிரியர் & மெர்லின்
ராகம் : கலவை
தாளம் : திஸ்ரம்
காலம் : Dec 2010
இடம் : THe Chapel, Tuticorin.
பதுவை நகரின்
பதுவை நகரின் ஒளிச்சுடரே
புதுமைகள் புரிந்திடும் இறைவள்ளலே
இறைவார்த்தையை எங்கும் விதைத்தவரே
நன்மைகள் கோடி புரிபவரே
வாழ்க தூய அந்தோணியாரே
இறைவனின் வரங்களைப் பொழிபவரே
இயேசுவை கரங்களில் ஏற்றவரே
இறைவனின் வீரராய்த் திகழ்பவரே
அலகையின் செயல்களை அறவே ஒழித்து
அமைதியும் அருளும் பொழிந்தாயே
இழந்ததை மீட்டு கொடுப்பவரே
இயலாததை செய்து முடிப்பவரே
எங்களின் குறைகளை தயவாய்க் கேட்டு
கண்ணீர் துடைத்து வரம் பொழிந்தாய்
இயல் : சகோ. பிரபு க.ச.
இசை : சகோ. பிரபு க.ச.
குரல் : சகோ. ஜோசப் க.ச.
ராகம் :
தாளம் : ஆதி
காலம் :
கலையும் கனவே
புலரும் காலை பொழுதினிலே
புலரும் காலைப் பொழுதினிலே
புனித பலியினில் கலந்திடவே
விரைந்து வாரீர் இறைக்குலமே
விடியல் காணும் நம் வாழ்வே
அன்புடன் அழைக்கும் ஆண்டவனின்
அருள்தரும் பலியினில் கலந்திடுவோம்
அமைதியை அவனியில் விதைத்திடவே
ஆலயத்தில் ஒன்று கூடுவோம் - நாம்
காரிருள் நீக்கும் கதிரவனும்
கடவுவைத் துதிக்க எழுகின்றான்
கரங்கள் விரித்துக் காத்திருக்கும்
கருணைக் கடலினில் சங்கமிப்போம் -நாம்.
இயல் : சகோ. தியாகராஜன் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : S. B. இருதயராஜ்
ராகம் :
தாளம் : ஆதி
காலம் : Aug - Oct 2010
இடம் : பதுவை ஆசிரமம், தூத்துக்குடி
பகலவன் ஒளிர்கையிலும்
பகலவன் ஒளிர்கையிலும்
பிறை நிலவினில் கால்பதித்தே
பனிமயமாய் உதித்தவளின் - மலர்ப்
பாதங்கள் பணிந்திடுவோம் - அவள்
பரிந்துரை வேண்டிடுவோம்
பனிமயத் தாய் வாழ்க - 3
முத்து விளையும் நகரில் - இறை
முத்தைக் கரமேந்தி
கலங்கரை விளக்கெனவே
கரைதனில் நிற்பவளே
பாவிகள் எம் பிழைகள்
பனியைப் போல் கரைத்திடவே
பரமனை வேண்டிடுவீர்
எங்கள் பாவங்கள் போக்கிடுவீர்
இயல் : சகோ. தியாகராஜன் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : ஜூலிபால் & ரெக்ஸி
ராகம் : கலவை
தாளம் : ஆதி
காலம் : 20-30 ஜூலை, 2010
சூழல் : பனிமய அன்னை பெருவிழா, தூத்துக்குடி.
இடம் : பதுவை ஆசிரமம், தூத்துக்குடி
கல்வாரியே என் தவம் நீ
கல்வாரியே! | என் தவம் நீ செய்தாயோ - 2
கர்த்தர் உன்னில் மரிக்க, உன் தவம் பெரிதே
தலையை சாய்க்க இடமின்றி
தரைக்கு மேலே தொங்கிய
இறையைச் சுமந்த சிலுவையே
என் தவம் நீ செய்தாயோ ? -2-
உன்னையே படைத்தோன்
உன்னிலே உயிர்விட
உன் தவம் பெரிதே -2
உரக்கக் கதறி உயிர்விட்டு
உதிரம் சிந்தி மீட்டிட
உணர்வில்லாத உள்ளமே
என் தவம் நீ செய்தாயோ?
உன்னையே படைத்தோன்
தன்னையே ஈந்திட
உன் தவம் பெரிதோ? - 2
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : மெர்லின்
ராகம் : கலவை
தாளம் : ரூபகம்
காலம் : Jan - March 2010
இடம் : பதுவை ஆசிரமம், தூத்துக்குடி
வருந்தி நான் வரும் வேளை
வருந்தி நான் வரும் வேளை
எனை நீ , ஏற்பாய் அணைப்பாய் - மன்னிப்பாய்
விழுகின்றேன் (பலன்மின்றி) ஆழுகின்றேன் (துணையின்றி)
பாவச் சுமையால் திணறுகிறேன்
கரைகின்றேன் ( திறனின்றி) மறைகின்றேன் (உறவின்றி)
கண்ணீர் சிந்துகின்றேன்.
உன்னை நோக்கிப் பார்க்கின்றேன்
இயலாமல் தோற்கின்றேன்
உந்தன் மன்னிப்பைக் கேட்கிறேன்
உன் பாதம் பணிகின்றேன்
தவறினேன் (நெறியின்றி) குமுறினேன் (கதியின்றி)
உன்னைத் தேடி வருகின்றேன்.
மறக்கின்றேன் (நினைவின்றி) இருக்கின்றேன் (விதியின்றி) எனையே வெறுக்கிறேன்.
உன் கருணைக்காய் ஏங்கினேன்
திசையெங்கும் தேடினேன்
உன் அன்பை நாடினேன்
உன் பாதம் பணிகின்றேன்
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : டேவிட் & எஸ்தர்
ராகம் :
தாளம் : ஆதி
காலம் :
இடம் : பதுவை ஆசிரமம், தூத்துக்குடி
மண் போற்றும் மாணிக்கரே
இன்னிசைக் கருவிகள்
இன்னிசைக் கருவிகள் மீட்டிடுவோம்
இதயம் மகிழ்ந்து பாடிடுவோம்
பிறவி பாவத்தலையின்றி
பிறந்தவள் பாதத்தில் பணிந்திடுவோம்
உதிரத்தில் இறைவனைச் சுமந்தவளே
உலகத்தை மீட்க உதித்தவளே
உலகத்தின் மாயையின் உழலும் எங்கள்
உள்ளத்தில் உண்மையை உரைத்திடுமே
அண்டி வந்தோம் யாம் உம்மிடமே
அழைத்துச் செல்லும் உம் மகனிடமே.
அமலியாய் பாரினில் பிறந்தவளே
ஆண்டவர் இயேசுவின் தாய் மரியே
அலகையின் ஆட்டத்தை அடக்கிடவே.
ஆயுதமாய் தந்தாய் செபமாலை
அனுதினம் யாம் ஜெபித்திடுவோம்
அல்லல்கள் தீர்ப்பாய் அருள் மரியே
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : சகோ. ஜோசப் க.ச.
ராகம் :
தாளம் : ஆதி
காலம் :
இடம் : பதுவை ஆசிரமம், தூத்துக்குடி
காணிக்கைகள் உமக்கு
எளிய மனத்தோர்
பனித்துளிகள் பொழிய
பனித்துளிகள் பொழியப் பொழிய
பாச வாழ்வில் நனைய நனைய
உறவுப் பாதை எங்கள் முன்னே
அமைதியோடு தொடர்வாய் பின்னே
பொன்னான பூமி இதுக்கு
உயர்வான பெருமை இருக்கு
முழுசாக தெரிஞ்ச நானும்
சொல்லாமல் போகலாமா
உழைப்பு ஒன்றே எங்கள் வாழ்வு - அதைப்
பறை சாற்றுவதில் இல்லை தாழ்வு.
பகிர்ந்து வாழ்வோம் மலையடிப்பட்டியிலே
செழித்து வாழ வந்திடுவீர் இங்கே.
எட்டுத் திக்கும் வயலின் பசுமை
ஓடுகின்ற ஆற்றின் வளமை
தூய்மையான தவழும் தென்றல்
ஒன்று கூடி வாடும் அன்றில்
சொல்லச் சொல்ல நான் இதைச் சொல்ல
உந்தன் மனமும் மாறிடும் மெல்ல
எங்கள் ஊரில் கூடி வாழ
உனக்கும் ஆசை வந்திடும் மெல்ல
உறவு தான் அகிலமே - இது எங்களின் சாரமே.
உயர்ந்து காக்கும் மலையின் வலிலை
ஓடுகின்ற தேரின் பெருமை
வியர்வை சிந்தி உழைக்கின்றோமே
சொந்தங்களாய் வாழ்கின்றோமே
சொல்லச் சொல்ல நான் இதைச் சொல்ல
உந்தன் மனமும் மாறிடும் மெல்ல
எங்கள் ஊரில் கூடி வாழ
உனக்கும் ஆசை வந்திடும் மெல்ல
உறவு தான் அகிலமே - இது எங்களின் சாரமே.
பனிமாதா கோயிலின் பழமை
சவேரியார் கோயிலின் பெருமை
தோமையார் மலையின் செழுமை - அந்த
புனிதரின் சிறந்த புதுமை
சொல்லச் சொல்ல நான் இதைச் சொல்ல
உந்தன் மனமும் மாறிடும் மெல்ல
எங்கள் ஊரில் கூடி வாழ
உனக்கும் ஆசை வந்திடும் மெல்ல
உறவு தான் அகிலமே - இது எங்களின் சாரமே.
இயல் : லாரன்ஸ்.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : ஜூலிபால்
ராகம் :
தாளம் : ஆதி
காலம் :
சூழல் :
இடம் : தூய சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி