அன்பனே இறைவனைப் போற்று
நண்பனே இறைவனைப் போற்று
அமைதியில் இறைவனைப் போற்று
நாளுமே இறைவனைப் போற்று
உடலும் உயிரும் இணைந்துள்ள வரையில்
உன் புகழ் பாட இயைந்திடுவேன் - 2
வளமையும் பெருமையும் - ஆ...ஆ...ஆ
நீ தந்த கொடையே
வாழ்வின் மேன்மையும் நீ தந்த கொடையே - 2
வாழ்வாய் வழியாய் எனை வழி நடத்தி
எந்தன் வாழ்வை மாற்றுகின்றீர் - 2
உந்தன் உயிரையும் - ஆ...ஆ...ஆ
எமக்காய் ஈந்தீர்
உண்மையின் இறைவா உமதருள் தாரும் - 2
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : Mr. பாக்யா
விழிகளிலே இமையாக என்னைக்
காத்திடும் இறைமகனே - 2
காற்றும் மழையும் ஓயா அலையும்
கானமாய் உம்மைப் புகழ்ந்தேத்திடுமே - 2
கதிரவன் வெம்மையில் மேகமாய் காத்திட்டாய்-2
காரிருள் தன்மையில் தணலாய் காத்திட்டாய் - 2
பேழையில் இறங்கி பிரசன்னம் தந்திட்டாய் - 2
பிறக்கும் முன்பே பெயர் சொல்லி அழைத்தாய் 2
வழியாய் ஒளியாய் உயிராய் உண்மையாய்
மானிட மீட்பைக் கொடுத்தவர் நீரே - 2
மண்ணில் பிறந்த எம் மறைபொருள் நீரே - 2
அன்பின் ஒளியினை அளித்தவர் நீரே - 2
எமக்கமாய் துன்புற்ற இறைமகன் நீரே - 2
கருணையின் உருவாய் இருப்பவர் நீரே-2 -
இயல்: சகோ. ஜோசப் க.ச.
இசை: சகோ. ஜோசப் க.ச.
குரல்: ஜேம்ஸ் ஆசிரியர்
வருகிறார் நம் உறவைத் தேடியே
இதய வாசல் திறந்து அவரின் -
உறவில் '' உறவில் வாழுவோம்
உடலும் உயிரும் உள்ளம் என்றும்
உன்னை நினைத்து மகிழ்ந்திடும்
அமைதி வாழ்வை நாளும் காக்க - 2
மனதில் அன மகிழிச்சி நிறைந்திடும் - எங்கள்
உந்தன் வார்த்தை ஏற்று வாழ்ந்தால்,
உலகின் அமைதி பிறந்திடும்
பிறந்த அமைதி மனதில் நிலைக்க
உந்தன் அருளைப் பொழிந்திடும் - என்றும்
இயல்: சகோ. ஜோசப் க.ச.
இசை: சகோ. ஜோசப் க.ச.
குரல்: Mr. மருது
இசையினில் ஒரு புது ரகம் இங்கு
உனக்கென நான் பாடி
மொழியினில் தேன் மொழியினை இன்று
உனக்கென நான் தேடி இனிமையின் உரம் கூடி
தமிழின் கவியில் இனிய குரலில் உனை வாழ்த்திடுவேன்
உனை நினையா ஓர் யுகம் ஒரு போதும்
ஓர் நொடிக்கீடில்லையே
எனில் நீ இணைகின்ற ஒரு நொடிப் பொழுதும்
பல யுகத்தை வெல்லுமே
உன் புகழைப் பாடிடவே
என் உயிர் நிலைக்கின்றதே
வாழ்வும் நீ, வழியும் நீ, உயிரும் நீயே,
உன்னோடு நான் வாழ்கிறேன் - 2
கொடியினைப் பிரிந்த கிளைதனைப் போல
உனைப் பிரிந்து வாடினேன்
திசையறியாமல் தவித்திடும் கலம் போல்
உனை மறந்து வாடினேன்
உன் அன்பில் வாழ்ந்திடவே
என் உயிர் நிலைக்கின்றதே
உயிரும் நீ, உயிர்ப்பும் நீ, உண்மையும் நீயே உன்னோடு நான் வாழ்கிறேன் - 2
இயல்: சகோ. ஜோசப் க.ச.
இசை: சகோ. ஜோசப் க.ச.
குரல்: ஜேம்ஸ் ஆசிரியர் & மெர்லின்
பதுவை நகரின் ஒளிச்சுடரே
புதுமைகள் புரிந்திடும் இறைவள்ளலே
இறைவார்த்தையை எங்கும் விதைத்தவரே
நன்மைகள் கோடி புரிபவரே
வாழ்க தூய அந்தோணியாரே
இறைவனின் வரங்களைப் பொழிபவரே
இயேசுவை கரங்களில் ஏற்றவரே
இறைவனின் வீரராய்த் திகழ்பவரே
அலகையின் செயல்களை அறவே ஒழித்து
அமைதியும் அருளும் பொழிந்தாயே
இழந்ததை மீட்டு கொடுப்பவரே
இயலாததை செய்து முடிப்பவரே
எங்களின் குறைகளை தயவாய்க் கேட்டு
கண்ணீர் துடைத்து வரம் பொழிந்தாய்
இயல்: சகோ. பிரபு க.ச.
இசை: சகோ. பிரபு க.ச.
குரல்: சகோ. ஜோசப் க.ச.
கலையும் கனவே நீள்வதேனோ
கண்களின் வலியை உணர்வதேனோ
உயிரே மெழுகாய் கரைவதேனோ
அமைதியில் இறைவனை காணவோ
அன்பின் இறைவனை போற்றுதே
அவர் வாழ்க்கையை உளம் சாற்றுதே
மனதின் உறுதியே உயிரின் முடிவே
எந்தன் வாழ்வின் துணையாய் வருவாய்
மண்ணில் மாண்டு நான் அழுகினாலும்
உன்னில் நிலை பெற அருளைத் தருவாய்
மதியின் பெருமையை இதழ் சொன்னாலும்
கதியே நீயென்ன்று உன்னைச் சேர்வேன்
உன்னைச் சேர நான் ஆசிக்கின்றேன்
இறையே உன்னெறி காட்டுவாய்
அன்பின் இறைவனை போற்றுதே
அவர் வாழ்க்கையை உளம் சாற்றுதே
உந்தன் குருதிகள் ஒவ்வொன்றும் என்
பாவம் போக்கும் பானம் தானோ
விண்ணில் தோன்றிடும் வெள்ளிமழை போல்
உன்னைக் காண நான் மீண்டும் பிறப்பேன்
இரவோ பகலோ இல்லை வானில்
மனித கலமோ இறையின் சாயல்
உன்னைச் சேர நான் ஆசிக்கின்றேன்
இறையே உன்னெறி காட்டுவாய்
அன்பின் இறைவனை போற்றுதே
அவர் வாழ்க்கையை உளம் சாற்றுதே
இயல் : சகோ. பிரபு ராஜ்குமார் க.ச.
இசை : சகோ. பிரபு ராஜ்குமார் க.ச.
குரல்:
புலரும் காலைப் பொழுதினிலே
புனித பலியினில் கலந்திடவே
விரைந்து வாரீர் இறைக்குலமே
விடியல் காணும் நம் வாழ்வே
அன்புடன் அழைக்கும் ஆண்டவனின்
அருள்தரும் பலியினில் கலந்திடுவோம்
அமைதியை அவனியில் விதைத்திடவே
ஆலயத்தில் ஒன்று கூடுவோம் - நாம்
காரிருள் நீக்கும் கதிரவனும்
கடவுவைத் துதிக்க எழுகின்றான்
கரங்கள் விரித்துக் காத்திருக்கும்
கருணைக் கடலினில் சங்கமிப்போம் -நாம்.
இயல்: சகோ. தியாகராஜன் க.ச.
இசை: சகோ. ஜோசப் க.ச.
குரல்: S. B. இருதயராஜ்
பகலவன் ஒளிர்கையிலும்
பிறை நிலவினில் கால்பதித்தே
பனிமயமாய் உதித்தவளின் - மலர்ப்
பாதங்கள் பணிந்திடுவோம் - அவள்
பரிந்துரை வேண்டிடுவோம்
பனிமயத் தாய் வாழ்க - 3
முத்து விளையும் நகரில் - இறை
முத்தைக் கரமேந்தி
கலங்கரை விளக்கெனவே
கரைதனில் நிற்பவளே
பாவிகள் எம் பிழைகள்
பனியைப் போல் கரைத்திடவே
பரமனை வேண்டிடுவீர்
எங்கள் பாவங்கள் போக்கிடுவீர்
இயல்: சகோ. தியாகராஜன் க.ச.
இசை: சகோ. ஜோசப் க.ச.
குரல்: ஜூலிபால் & ரெக்ஸி
கல்வாரியே! | என் தவம் நீ செய்தாயோ - 2
கர்த்தர் உன்னில் மரிக்க, உன் தவம் பெரிதே
தலையை சாய்க்க இடமின்றி
தரைக்கு மேலே தொங்கிய
இறையைச் சுமந்த சிலுவையே
என் தவம் நீ செய்தாயோ ? -2-
உன்னையே படைத்தோன்
உன்னிலே உயிர்விட
உன் தவம் பெரிதே -2
உரக்கக் கதறி உயிர்விட்டு
உதிரம் சிந்தி மீட்டிட
உணர்வில்லாத உள்ளமே
என் தவம் நீ செய்தாயோ?
உன்னையே படைத்தோன்
தன்னையே ஈந்திட
உன் தவம் பெரிதோ? - 2
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை: சகோ. ஜோசப் க.ச.
குரல்: மெர்லின்
வருந்தி நான் வரும் வேளை
எனை நீ , ஏற்பாய் அணைப்பாய்
- மன்னிப்பாய்
விழுகின்றேன் (பலன்மின்றி)
அழுகின்றேன் (துணையின்றி)
பாவச் சுமையால் திணறுகிறேன்
கரைகின்றேன் ( திறனின்றி)
மறைகின்றேன் (உறவின்றி)
கண்ணீர் சிந்துகின்றேன்.
உன்னை நோக்கிப் பார்க்கின்றேன்
இயலாமல் தோற்கின்றேன்
உந்தன் மன்னிப்பைக் கேட்கிறேன்
உன் பாதம் பணிகின்றேன்
தவறினேன் (நெறியின்றி)
குமுறினேன் (கதியின்றி)
உன்னைத் தேடி வருகின்றேன்.
மறக்கின்றேன் (நினைவின்றி)
இருக்கின்றேன் (விதியின்றி)
எனையே வெறுக்கிறேன்.
உன் கருணைக்காய் ஏங்கினேன்
திசையெங்கும் தேடினேன்
உன் அன்பை நாடினேன்
உன் பாதம் பணிகின்றேன்
இயல்: சகோ. ஜோசப் க.ச.
இசை: சகோ. ஜோசப் க.ச.
குரல்: டேவிட் & எஸ்தர்
மண் போற்றும் மாணிக்கமே சவேரியாரே
குறைகளையெல்லாம் போக்குகின்ற புனிதரே
மீட்பர் இயேசு போல எங்கள் வாழ்வினையே
வசந்தமாக்கி மகிழ்பவரே சவேரியாரே
வாழியவே ஆன்மாவின் காவலரே
ஆன்மாவே ஆதாயமென வாழ்ந்தவரே
ஆற்றலோடு இறைவார்த்தை சொன்னவரே
நீர் சொன்னபடி நாளும் நாங்கள் வாழ்ந்திட
சுயநலமே அழிந்திடவே அருள்புரிவாயே
வாழியவே குறை தீர்க்கும் காவலரே
ஆன்மீகத் தேடலென்னும் வழியினிலே
ஆசையென்னும் கொடுநஞ்சை அழித்தவரே
உமதடியினிலே நாளும் நாங்கள் நடந்திட
உம் ஆன்மீக ஆற்றலை அளித்திடுவாயே
வாழியவே எங்கள் ஊரின் காவலரே
நானிலமே போற்றுகின்ற மாமனிதா
மாபரனின் வார்த்தைகளை நிறைவேற்ற
மலையடிநகர் பெருமைதனை உலகறிய
மகிமையோடு வந்தவரே சவேரியாரே
வாழியவே எங்கள் பங்கின் காவலரே
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல்:
இன்னிசைக் கருவிகள் மீட்டிடுவோம்
இதயம் மகிழ்ந்து பாடிடுவோம்
பிறவி பாவத்தலையின்றி
பிறந்தவள் பாதத்தில் பணிந்திடுவோம்
உதிரத்தில் இறைவனைச் சுமந்தவளே
உலகத்தை மீட்க உதித்தவளே
உலகத்தின் மாயையின் உழலும் எங்கள்
உள்ளத்தில் உண்மையை உரைத்திடுமே
அண்டி வந்தோம் யாம் உம்மிடமே
அழைத்துச் செல்லும் உம் மகனிடமே.
அமலியாய் பாரினில் பிறந்தவளே
ஆண்டவர் இயேசுவின் தாய் மரியே
அலகையின் ஆட்டத்தை அடக்கிடவே.
ஆயுதமாய் தந்தாய் செபமாலை
அனுதினம் யாம் ஜெபித்திடுவோம்
அல்லல்கள் தீர்ப்பாய் அருள் மரியே
இயல்: சகோ. ஜோசப் க.ச.
இசை: சகோ. ஜோசப் க.ச.
குரல்: சகோ. ஜோசப் க.ச.
காணிக்கைகள் உமக்கு அர்ப்பணிக்கும் வேளை
எனையே பலியாய் தருகின்றேன்
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை
அதனாலோ பலியாய் நீ உன் உயிர் ஈந்தாய்
மனமுல்ல மலரை நான் தர நினைத்தேன்
மலரல்ல மனம் போதுமென்றாய்
கதிர்விளை பயிரை நான் தர நினைத்தேன்
கோதுமையாக நீ மடிந்தாயு
எதனை நான் தருவேன்
அனைத்தும் கொடுத்தவர் நீர்
உலகின் மீட்பிற்காய்
தனைத்தந்த உனக்காக
நதியாய் நான் அலைந்து உனைச்சேர
நீலக் கடலென்று உனை நினைத்தேன்
மழையாய் எனைததேடி நீ வந்தாய்
மண் பரப்பாய் நான் இருக்க
எதனை நான் தருவேன்
அனைத்தும் கொடுத்தவர் நீர்
உலகின் மீட்பிற்காய்
தனைத்தந்த உனக்காக
இயல் : சகோ. ஜோசப் க.ச.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் :
எளிய மனத்தோர் பேறுபெற்றோர்
விண்ணகம் அவர்களதே
ஆண்டவர் என்றென்றும் சொல்தவறாதவரே. துன்புறுவோர்க்கு நீதி வழங்குகின்றார் பசியுற்றோருக்கு உணவளிபபோர் சிறைப்பட்டோரை ஆண்டவர் விடுவிக்கின்றார் -
குருடரின் கண்களை ஆண்டவர் திறக்கின்றார் தாழ்த்தப்பட்டோரை ஆண்டவர் உயர்த்துகின்றார் நீதிமான்கள் மீது ஆண்டவரே என்றென்றும் அன்பு செலுத்துகின்றார்.
அந்நியரை ஆண்டவர் காக்கின்றார் அநாதைகள் விதவைகள் அனைவரையும் ஆண்டவர் ஆதரிப்பார் அவரது ஆட்சி என்றும் நிலைத்திருக்கும் அமைதியும் அருளும் குடிகொள்ளும்.
இயல்: பிரபு ராஜ்குமார் க.ச
இசை: பிரபு ராஜ்குமார் க.ச
குரல்: ஜூலிபால்
பனித்துளிகள் பொழியப் பொழிய
பாச வாழ்வில் நனைய நனைய
உறவுப் பாதை எங்கள் முன்னே
அமைதியோடு தொடர்வாய் பின்னே
பொன்னான பூமி இதுக்கு
உயர்வான பெருமை இருக்கு
முழுசாக தெரிஞ்ச நானும்
சொல்லாமல் போகலாமா
உழைப்பு ஒன்றே எங்கள் வாழ்வு - அதைப்
பறை சாற்றுவதில் இல்லை தாழ்வு.
பகிர்ந்து வாழ்வோம் மலையடிப்பட்டியிலே
செழித்து வாழ வந்திடுவீர் இங்கே.
எட்டுத் திக்கும் வயலின் பசுமை
ஓடுகின்ற ஆற்றின் வளமை
தூய்மையான தவழும் தென்றல்
ஒன்று கூடி வாடும் அன்றில்
சொல்லச் சொல்ல நான் இதைச் சொல்ல
உந்தன் மனமும் மாறிடும் மெல்ல
எங்கள் ஊரில் கூடி வாழ
உனக்கும் ஆசை வந்திடும் மெல்ல
உறவு தான் அகிலமே - இது எங்களின் சாரமே.
உயர்ந்து காக்கும் மலையின் வலிலை
ஓடுகின்ற தேரின் பெருமை
வியர்வை சிந்தி உழைக்கின்றோமே
சொந்தங்களாய் வாழ்கின்றோமே
சொல்லச் சொல்ல நான் இதைச் சொல்ல
உந்தன் மனமும் மாறிடும் மெல்ல
எங்கள் ஊரில் கூடி வாழ
உனக்கும் ஆசை வந்திடும் மெல்ல
உறவு தான் அகிலமே - இது எங்களின் சாரமே.
பனிமாதா கோயிலின் பழமை
சவேரியார் கோயிலின் பெருமை
தோமையார் மலையின் செழுமை - அந்த
புனிதரின் சிறந்த புதுமை
சொல்லச் சொல்ல நான் இதைச் சொல்ல
உந்தன் மனமும் மாறிடும் மெல்ல
எங்கள் ஊரில் கூடி வாழ
உனக்கும் ஆசை வந்திடும் மெல்ல
உறவு தான் அகிலமே - இது எங்களின் சாரமே.
இயல் : லாரன்ஸ்.
இசை : சகோ. ஜோசப் க.ச.
குரல் : ஜூலிபால்