Vetrisaipadal

வெற்றிசைப்பாடல்

(Youtube Channel)

தமிழ் கத்தோலிக்க திரு அவை கானங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் குரலறுவிசைப் பிரிப்பு செய்யப்பட்டு (குரல் + அறு + இசை = குரல் நீக்கம் செய்யப்பட்ட பின்னனி இசை), இசைக் கோர்ப்பு மெருகேற்றப்பட்டு, வெற்றிசைப் பாடல்களாக (Karaoke) Youtube Channel-இல் வெளியிடப்படுகிறது. 500க்கும் மேலான வெற்றிசைப்பாடல்களோடு, தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதிய பாடல்கள் பதிவேற்றப்படுகின்றன. வகைப்படுத்தப்பட்ட இப்பாடல் தொகுப்புகளின் இணைப்புகள், இதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்கத் திருஅவையின் படிப்பினையின் படி, திருப்பலியில் இவ்வகை வெற்றிசைப்பாடல்கள் பயன்படுத்தக்கூடாது. ஆனால், இறைஇசை ஆர்வலர்களுக்கும், பாடகர் குழுவினருக்கும், பாடல் கற்போருக்கும் இது ஒரு பயனுள்ள ஊடகம். பொது நிகழ்வுகளிலும், கலை நிகழ்ச்சிகளிலும் சினிமாப் பாடல்களைத் தவிற்த்து, இறை இசைப் பாடல்களின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதில், இவ்வெற்றிசைப்பாடல்கள் தூண்டுகோளாய் அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. "இசையோடு இணைந்து பாடுவோம்; இறைவனைப் புகழ்வோம்"

-அருட்பணி. ஜோசப் அரா க.ச.

_______________________

Disclaimer: Tamil Catholic Church songs are being processed using Artificial Intelligence (AI) technology to separate vocals and background music (voice removal), refine the musical arrangements, and release them as karaoke tracks on a dedicated YouTube channel. With over 500 karaoke tracks already available, new songs are uploaded weekly. Links to these categorized song collections are provided below.


While these karaoke tracks are a valuable resource for music enthusiasts, singers, and learners, they are not permitted for use during Mass according to Catholic Church teachings. However, they serve as an excellent medium for promoting the use of Christian devotional songs in public events and artistic performances, encouraging a shift away from cinema songs. This initiative undoubtedly inspires people to sing and praise God through sacred music.


"Let us sing along with music; let us glorify God."

- Fra. Joseph ArRa OFM Cap.,

Playlists of Karaokes